தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி . சமீபத்தில் இவரின் அன்பு தங்கை நடிகை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாய்பல்லவி மிகவும் சந்தோசமாக குத்தாட்டம் போட்ட கலக்கலான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
பிரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது அழகாலும் நடிப்பு திறமையாலும் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை பூஜா கண்ணன் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த ஒரு படத்தை நடித்துவிட்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் பூஜா கண்ணன்.
மேலும், பூஜா கண்ணன் Instagram பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களிடம் பகிர்ந்து வந்துள்ளார். இந்த வகையில் பூஜா கண்ணன் சமீபத்தில் தனது லைப் பார்ட்னரை அறிமுகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து, சில நாட்கள் முன்பாக கோலாகலமாக நடைபெற்ற பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிச்சயதார்த்த விழாவில் பூஜா கண்ணனின் அக்காவான நடிகை சாய்பல்லவி மிகவும் குஷியாக போட்ட குத்தாட்டம் டான்ஸ் ரசிகர் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…
மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…