சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை சாய் பல்லவியின் அழகான க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

‘பிரேமம்’ படத்தில் இவர் நடித்த மலர் கதாபாத்திரம் எத்தனையோ இளைஞர்களின் தூக்கத்தை கலைத்தது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றது பிரேமம் திரைப்படம். மலர் டீச்சர் ஆக நடித்த மக்களின் மனங்களை கவர்ந்தார் நடிகை சாய் பல்லவி. இதை தொடர்ந்து 2016ல் துல்கர் சல்மானுடன் இணைந்து கலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

2017 ஆம் ஆண்டு காதல் படமாக வெளியான பிடா திரைப்படம் சாய் பல்லவிக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் எப்பொழுது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ‘கரு’ திரைப்படம் மூலம் 2018ல் தமிழில் அறிமுகமானார்.

அதே வருடத்தில் வெளியான ‘மாரி 2’ திரைப்படம் சாய்பல்லவிக்கு தமிழில் ஹிட் கொடுத்தது. இதில் அராத்து பெண்ணாக வலம் வந்த சாய்பல்லவி தனுஷுடன் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக கார்கி எனும் திரைப்படம் தமிழில் வெளிவந்து ஹிட்டானது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் கே 21 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது இவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.
