உறவினர்கள் சூழ களைகட்டிய நடிகை சாய் பல்லவி தங்கையின் நிச்சியதார்த்தம்… வெளியான புகைப்படங்கள்..

By Begam

Updated on:

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் சாய் பல்லவி.

   

பிரேமம் என்ற ஒரே படத்தில் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார் சாய் பல்லவி. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமானார் சாய் பல்லவி.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் சாய் பல்லவி. அதன்பின்னர் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது ற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சாய் பல்லவி. இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார். அவரின் பெயர் பூஜா கண்ணன்.

இவரும் தற்பொழுது நடிகையாக களமிறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.  விரைவில் திருமணம் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது தங்கை நிச்சயத்துக்கு ரெடியாகும் வீடியோ ஒன்றை சாய் பல்லவி வெளியிட அந்த விடியோவும், நிச்சயதார்த்த புகைப்படங்களும் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by RAMYA SHIVA✨ (@ramya_shiva)