Categories: சினிமா

அஜித் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இதுதான்.. அமரன் நாயகி சாய் பல்லவி ஓபன் டாக்..!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் படுகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சாய் பல்லவி. பள்ளி படிப்பை முடித்த பின்பு மருத்துவத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்றார் சாய் பல்லவி. மருத்துவர் ஆனாலும் டான்சர் ஆக வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறுவயதில் இருந்து ஆர்வம் இருந்தது. இதனையடுத்து மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அந்தத் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

படத்தில் அவரை பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுதான் முதல் படமா என்று ஆச்சரியப்படும் வகையில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகை என்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸரும் கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட அவர் போட்டியாளராக பங்கேற்றார். பிறகு சினிமாவுக்குள் நுழைந்தார். போலிகளை உடைத்த நாயகி. இறுதியாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்த இந்து கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நாகசைதன்யாவுடன் இணைந்து தண்டேல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்ச அளவில் உருவாகி வரும் திரைப்படம் தான் ராமாயணா. நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ரன்ஃபீர் கபூர் ராமனாகவும் சாய்பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். மேலும் யாஷ் இந்த படத்தில் ராவணனாக நடித்து வருவதாக சொல்லப்படுகின்றது.  இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ளார்.

அதில், நான் அஜித் சாருடன் இணைந்து இதுவரை பணியாற்றியது கிடையாது. ஆனால் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய எளிமை தான். நான் இதுவரை அவரை நேரில் கூட பார்த்ததில்லை. அவருடன் வேலை பார்த்தவர்கள் அவரை நேரில் சந்தித்தவர்கள் என்கிட்ட அஜித் பற்றி நிறைய சொல்லுவாங்க. அவர் எப்பவுமே மிகவும் எளிமையாக இருப்பார் அனைவருக்கும் நல்ல மரியாதை கொடுப்பார் என்றும் அதேசமயம் தான் ஒரு பெரிய ஸ்டார் என்ற கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுவார் என்று தான் கேள்விப்பட்டதாக சாய்பல்லவி கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

4 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

7 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

10 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

12 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

25 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

25 minutes ago