மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்து வந்தார். பிறகு கைரளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியான ஜகபோகாவில் இவர் நடித்த போது இவருக்கு திருப்பம் ஏற்பட்டது. ஒரு நகைச்சுவை நடிகராக இவர் பல நிகழ்ச்சிகளில் பல நடிகர்களின் குரலில் பேசியுள்ளார். ஒரு தொகுப்பாளராக தன்னுடைய சிறை வாழ்க்கையை தொடங்கிய இவர் நகைச்சுவை நடிகராகவும், பொழுதுபோக்கு கலைஞராகவும், ஒரு திரைப்பட நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
குறிப்பாக இரண்டாயிரம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரளா மாநில திரைப்பட விருதுகளை 2009, 2010, 2013 என தொடர்ந்து மூன்று முறை வென்றார். பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நிலையில் பேரறியாதவர் படத்தில் படித்ததற்காக 2014 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றுள்ளார்.
இப்படி பல புகழுக்குறியை இவ்வாறு கடந்த 2005 ஆம் ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சூரஜ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீரதீர சூரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் படகு குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இருந்தனர்.
அப்போது மேடையில் கலகலப்பாக பேசிய சூரஜ், எனக்கு ஆஸ்கார் விருது கிடைக்கப் போகிறது என்றால் நான் நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கின்றேன். இது பற்றி என் மனைவியிடம் பேசவும் நான் தயார். ஏனென்றால் என்னுடைய முதல் மகன் பிறந்த போது எனக்கு மாநில அரசு விருது கிடைத்தது. அதன் பிறகு இரண்டாவது மகனும் பிறந்த போது மற்றொரு மாநில அரசு விருது கிடைத்தது. அடுத்ததாக என் பெண் குழந்தை பிறந்த போது மாநில அரசு மற்றும் தேசிய விருது என இரண்டு விருதும் சேர்ந்து கிடைத்தது. அடுத்ததாக வீரசூரன் படத்திற்காக ஒரு விருது கிடைக்கிறது என்றால் அதற்காக மீண்டும் நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ளவும் நான் தயாராக இருக்கின்றேன் என மேடையில் கலகலப்பாக பேசினார்.
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…