நடிகை சதா கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சதா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஜெயம் படம் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். அதன் பிறகு எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி உள்ளிட்ட படங்களில் சதா நடித்தார். இதில் அந்நியன் திரைப்படம் சதாவுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சதா நடித்துள்ளார். சமீப காலமாக சதா சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சதா அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்.
View this post on Instagram
இந்த நிலையில் சதா தற்போது புகைப்படம் கலைஞராக மாறியுள்ளார். அவர் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பான போட்டோசும், வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram