80ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை ரூபினியின் மகளை பார்த்திருக்கீங்களா?… செம்ம அழகா இருக்காங்களே… நீங்களே பாருங்க…

80ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை ரூபினியின் மகளை பார்த்திருக்கீங்களா?… செம்ம அழகா இருக்காங்களே… நீங்களே பாருங்க…

80களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரூபினி. இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கர். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.  ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து மிலி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1987 விஜயகாந்தின் ‘கூலிக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் மனிதன், ராஜா சின்ன ரோஜா, என்ன பெத்த ராசா, அபூர்வ சகோதரர்கள், புலன்விசாரணை, மைக்கேல் மதன காமராஜன் ,

கேப்டன், உழைப்பாளி, தாமரை போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். தனது உறவினரான மோகன் குமார் ரயானா என்பவரை 2000ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரூபினி.

இவர் தற்பொழுது தனது அம்மா மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை இணையதள பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ரூபினியின் மகளா இவர்?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam