குணா படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நடிகை ரோஷினி.. காரணம் என்ன தெரியுமா..? பல ஆண்டு உண்மையை உடைத்தெறிந்த சந்தான பாரதி..!!

By Priya Ram on மார்ச் 13, 2024

Spread the love

இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் ரோஷினி நடித்த படம் குணா. ரிலீஸ் ஆன அந்த காலகட்டத்தில் படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் வித்தியாசமான கதை களம் என்ற பெயரை பெற்றது. சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு குணா படத்தை பற்றி மக்கள் மீண்டும் பேச ஆரம்பித்தனர்.

   

அதற்கு காரணம் குணா குகை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தற்போது ரிலீசான சில நாட்களிலேயே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் குணா திரைப்படத்தில் அபிராமி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ரோஷினி.

   

 

அந்த படத்தில் ரோஷினின் கதாபாத்திரம் ஒரு கடவுளைப் போலவும், தேவதை போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான தோற்றத்தால் அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மும்பையை சேர்ந்தவர் ரோஷினி. அந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கவும் இல்லை. அவர் நடித்த ஒரே படம் குணா தான்.

இந்த நிலையில் குணா பட இயக்குனர் சந்தான பாரதி ஒரு பேட்டியில் கூறியதாவது, குணா படத்தில் நடிக்கும் போதே ரோஷினி இனிமேல் நான் நடிக்க மாட்டேன் என ஒரு முடிவை எடுத்து விட்டார். குடும்பமும் வசதி படைத்தவர்கள். இதனால் அடுத்து எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. அவர் அபிராமியாகவே வாழ்ந்து சினிமாவிலிருந்து காணாமலும் போய்விட்டார்.