நடிகர் ரஜினிகாந்துடன் வீரா மற்றும் உழைப்பாளி படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரோஜா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரோஜா கூறியதாவது, மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பேன். யாரை கேட்டாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள்.
அதே போல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். நான் வருவதற்கு முன்பே அவர் ரோஜா படத்தை இயக்கி ரிலீஸ் ஆகிவிட்டது. இல்லை என்றால் ரோஜா படத்தில் நான்தான் நாயகியாக இருந்திருப்பேன். அது சந்தோஷமாக எனக்கு இருந்திருக்கும். மணிரத்னம் படத்தில் ஒரு சின்ன ரோலில் ஆவது நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.
