தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. இவர் . ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் தந்தை நாகராஜா ரெட்டி தாய் லலிதா. திருப்பதியில் உள்ள திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் Political Science இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக குச்சிப்புடி கற்று நடனம் ஆட கூடியவராக இருந்தார். நடிகை ரோஜா தெலுங்கில் வெளியான ‘பிரேமா தபசு’ என்ற படத்தில் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து இவர் நடிகர் பிரசாந்துடன் இணைந்து ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வீர, அசுரன், மக்களாட்சி, பரம்பரை, சின்ன துரை, நெஞ்சினிலே, ஊட்டி, திருநெல்வேலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் நீதிபதியாக, தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
நடிகை ரோஜா இயக்குனர் செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சினிமாவில் இருந்து நடிகை ரோஜா அரசியலில் களம் இறங்கினார் அரசியலில் கடுமையாக உழைத்து தொண்டரிலிருந்து எம்.எல்.ஏ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பணியாற்றி வருகிறார்.
தற்போது நடிகர் ரோஜாஆடி கிருத்திகை அன்று தன் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
மேலும் மக்களோடு மக்களாக நடந்து சென்று அரோகரா என்று கோஷமிட்டபடி காவடி எடுத்து சென்றுள்ளார்.கோயில் சார்பாக இவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசியவர் ஆந்திர மக்களுக்கும் தனது தொகுதி மக்களுக்கும் நல்லது செய்ய இறைவனை வேண்டிக் கொண்டதாக தெரிவித்திருந்தார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…