தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.
ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இணையத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் தான். அவரது போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன. தற்போது அன்ஷு மாலிகா 20 வயதை தொட இருப்பதாய் நினைத்து தனக்கு கவலையாக இருப்பதாக குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில், கணவனைப் பிரிந்து வேறொரு நபருடன் வாழச் சென்ற திருமணமான பெண் ஒருவர் மீது, 'புனிதப்படுத்தும்…
பெட்ரோல் பங்க்கிற்கு காரில் வந்த பெண் ஒருவர், டீசல் போடுவதற்காகக் காரை நிறுத்திவிட்டு, போனில் பேசுவது போல நடித்துக் காரை…
மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக…
அசாம் மாநிலம் கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 22 வயதான நிமிஷா தாகூரியா என்ற மாணவியின் மர்ம மரண வழக்கில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி…
மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…