விஜய்யுடன் ‘ஷாஜஹான்’ படத்தில் நடித்த நடிகையா இது..? ஆளே அடையாளம் தெரியலயே.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

By Mahalakshmi

Updated on:

2001 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “ஷாஜகான்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரிச்சா பலோட் நடித்துள்ளார். இவரின் தற்போதைய புகைப்படம் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

   

ஷாஜகான் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரிச்சர்ட் பலோட் ஒரு சில  காட்சிகளில் வந்திருந்தாலும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தில் விவேக் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்தும் கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டே  தான் இருக்கின்றது. இந்தத் திரைப்படத்தில் விஜய்யின் காதல் தோல்வியில் முடிந்தது போல காட்டினாலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஷாஜகான் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை ரிச்சா, இதனைத் தொடர்ந்து ‘காதல் கிறுக்கன்’, ‘சம்திங் சம்திங்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் திரைத்துறையில்  மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் போன்ற மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரிச்சா, ஹிமான்சு பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்; இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்கள். அதன்பிறகு திரைத்துறையில் தென்படாத நடிகை ரிச்சா, தற்போது   ரிச்சா பலோட்டின் லேட்டஸ்ட்  புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi