விஜயின் ‘ஷாஜஹான்’ பட நடிகையா இது…? 40 வயதிலும் அதே இளமையோடு இருக்காங்களே… ரீசென்ட் கிளிக்ஸ்….

By Begam on ஏப்ரல் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.  தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஷாஜகான்” திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பலோட். ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.  16 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த இவர் அதன் பிறகு விளம்பர படங்களில் நடித்தார்.

   

பின்னர் ஹிந்தியில் 1991 ஆம் ஆண்டு வெளியான லாமே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஷாஜஹான் திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் இறுதியாக 2015 ஆம் ஆண்டு யாகாவாராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் நடித்தார்.

   

 

அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்றார். ஹிந்தியில் இரண்டு சீரியல்களில் நடித்த இவ்வாறு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் உள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும் தனது குடும்ப புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.