80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகர் ரேவதி. தேவர்மகன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார் . திருமணம், குடும்பம் என செட்டிலா ஆன இவர் திரும்பவும் பல ஆண்டுகளுக்கு பின் தனுஷின் பவர் பாண்டி ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது 58 வயதாகும் இவர் சமீப காலமாகவே படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை இயக்கினார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வந்த நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஒன்றாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

அதன் பிறகு நடிகை ரேவதி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு தனக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக திடீரென கூறினார். இவர் திடீரென அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கமளித்த அவர், நான் டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்றேன். அதன் பிறகு நான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால் பலரும் இவரை நான் தத்து எடுத்த பிள்ளை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு நான் பெற்றெடுத்த குழந்தை தான் இவள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை ரேவதி மண்வாசனை திரைப்படத்தில் பாரதிராஜா மற்றும் பாண்டியனிடம் அடி வாங்கிய சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில், மண்வாசனை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கத்தி பேசுவது போல காட்சி இருந்தது. பாரதிராஜா சார் ஆக்சன் என்று சொன்னதும் எனக்கு கத்தி பேசவே வரல. பலமுறை சொன்ன பாரதிராஜா ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து என்னுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்து கத்து என்று சொன்னார். அதன் பிறகு தான் அந்த சீனில் கத்தி பேசினேன். ஆனால் அது எனக்கு ஒரு அறையாக தெரியவில்லை. நான் எதுவும் தப்பு செய்து விட்டு அரை வாங்கவில்லை. என்னை படத்தில் நடிக்க ஊக்குவிப்பதற்காகத்தான் அவர் கன்னத்தில் பளார் என அறைந்தார். ஆனால் பாரதிராஜா அடிப்பதற்கு முன்பே பாண்டியன் என்னை பளார் என்று அறைந்து விட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Manvasanai-Movie-Stills.jpg)
ஒரு காட்சியில் பாண்டியன் என்னை அறைய வேண்டும். என்னைப்போல் அவருக்கும் இதுதான் முதல் படம் என்பதால் ஒரு பெண்ணை அறைவது போல் காட்சி இருந்ததால் அவருக்கு எப்படி அறைவது என்று தெரியவில்லை. நன்றாக அறையாமல் கன்னத்தை தொடர் மட்டுமே செய்தார். பாரதிராஜா என்னை அடிக்கச் சொல்லிக் கொண்டே இருந்தார். பாண்டியன் சரியாக பண்ணாததால் பாரதிராஜா சார் அவர் கன்னத்துல ஆரஞ்சுட்டாரு. அந்தக் கோபத்தில் பாண்டியன் என்னை பளார் என்று அறைந்து விட்டார். சத்தம் கொய்ங் என வந்தது. எனக்கு வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. அவருடைய நான்கு விரல்கள் என் கன்னத்தில் பதிந்து போனது. அந்த காட்சியில் கூட அது நன்றாகவே தெரியும் என்று ரேவதி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
