மலையாளத் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ரெபா ஜான். இவர் தமிழ் மற்றும் கன்னட உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய திரைப்பட நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.மலையாள சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நுழைந்த இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கவர்ச்சி நடிகையாகவும் உள்ளார்.

தொடர்ந்து தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த தமிழில் அறிமுகமானார்.

பிறகு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திலும் இவர் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். இவர் தன்னுடைய நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர், தற்பொழுது ராணி போல ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிகில் பட நடிகையா இது..? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

