வெறித்தனமான ஒர்க் அவுட்டில் இறங்கிய நடிகை ரஷ்மிகா… இந்த வீடியோவை வைரலாக்குங்கப்பா…

By Begam on கார்த்திகை 9, 2023

Spread the love

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில்பிரபலமானவர்தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று கொண்டாடுகிறார்கள். சினிமாவிற்கு முன்பு மாடலிங்கில் இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

   

இப்படி தமிழ் ,ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார் நடிகை ரஷ்மிகா. இவர் சமீபத்தில்  அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் உடன் ‘அனிமேல்’ எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா தற்பொழுது ‘THE GIRL FRIEND’ புதிய திரைப்படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

   

 

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் ரஷ்மிகா பிட்னசிலும் அதிக கவனம் செலுத்த கூடியவர். அதனால் தான் தன்னுடைய உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக அவர் வைத்துள்ளார். பிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் அதிக ஒர்க் அவுட்களை தினமும் செய்ய கூடியவர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை  ரஷ்மிகா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் வெறித்தனமாக தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….