“என்னால் முடிந்தவரை நான் உன்னை”, ஆனால் பல விஷயங்களை நீயாக… தங்கை குறித்து ராஷ்மிகா உருக்கம்..!

By Nanthini on ஆவணி 20, 2024

Spread the love

இந்திய திரை உலகின் நேஷனல் கிரஷ் என்ற பட்டத்தோடு வளம் வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. தனது இளம் வயதில் வாடகை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த ஒரு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர்.

   

ஒரு கட்டத்தில் இவரின் தந்தை மிகப்பெரிய தேயிலைத் தோட்ட முதலாளியாக மாறினார். பெங்களூரில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் மாடலிங் துறையில் களமிறங்கினார்.

   

 

அதன் பின்னர் தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயணித்து வரும் ராஷ்மிகா கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ராஸ்மிகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கு வயது 28. அதனைப் போலவே இவருடைய தங்கை ஹிமாவிற்கும் வயது 9. ராஷ்மிகா பிறந்த சுமார் 19 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தைதான் இவர்.

தன் தங்கையோடு மிக நெருக்கமான பாசத்தோடு பழகி வரும் ராஷ்மிகா அவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தனது தங்கையுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படங்களை பகிர்ந்து, “நீ வாழ்க்கையில் பல போராட்டங்களைச் செய்ய வேண்டியதில்லை. நான் உனக்குகு உறுதியளிக்கிறேன். என்னால் முடிந்தவரை நான் உன்னை பாதுகாப்பேன், ஆனால் பல விஷயங்களை நீயாக கடந்து செல்ல வேண்டியிருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.