மிரர் செல்பீ  புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்த நடிகை ரஷ்மிகா… நாளுக்கு நாள் உங்க அழகு கூடிகிட்டே போகுதே…

By Begam on ஆடி 9, 2023

Spread the love

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று கொண்டாடுகிறார்கள். சினிமாவிற்கு முன்பு மாடலிங்கில் இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

   

   

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

 

தற்பொழுது தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை கொண்டு இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது தனது மிரர் செல்பீ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்தார்.  இவரின் இந்த புகைப்படமானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.