டெல்லியின் பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. 2011 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2020இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்றால் இவர் தான். ‘நேஷனல் கிரஷ் ஆப் இந்தியா’ என்று டைப் செய்தாலே போதும் இவருடைய பெயர் தான் வரும். அந்த அளவிற்கு பிரபலமானவர். இவர் தற்பொழுது வம்சிபைடிபள்ளி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப் பிடிப்பானது தற்பொழுது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதே சமயத்தில் அமிதாபச்சனுடன் இணைந்து நடிக்கும் குட் பாய் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள இவர், அங்குள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் ஒன்றில் தங்கியுள்ளார்.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இம்பீரியல் ஹோட்டலில் தங்கியுள்ள அவர் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலக அளவில் புகழ்பெற்ற பழமையான பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றான இம்பீரியல் ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அழகிய புகைப்படங்கள் இதோ….
இணையத்தில் தற்போது பாம்புகள் தொடர்பான மீட்பு வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம்…
ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, உதவி நடுவர் லெனின் ஒஜேடா என்பவரை மாற்றாட்ட வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து வீசப்பட்ட…
ஸ்ரீநகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது கஷ்மீர் வீரர் ஒருவர் பார்வையாளரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும்…
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜிங் நகரில், 3 வயது சிறுமி ஒருவர் 12-வது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்…
திரைத்துறையில் உச்சநட்சத்திரமாக விளங்கும் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியுடன் முதல்வர்…
துர்கா மாவட்டத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் அம்பிகாபூர் பேருந்து…