Connect with us

அந்த வீடியோ எப்டி வைரலாச்சுனு தெரில.. போலீஸ் கிட்ட Complaint குடுத்துருக்கன்.. அப்சட் ஆன ரஷ்மிகா..

CINEMA

அந்த வீடியோ எப்டி வைரலாச்சுனு தெரில.. போலீஸ் கிட்ட Complaint குடுத்துருக்கன்.. அப்சட் ஆன ரஷ்மிகா..

 

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில்பிரபலமானவர்தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று கொண்டாடுகிறார்கள். சினிமாவிற்கு முன்பு மாடலிங்கில் இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

   

இப்படி தமிழ் ,ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார் நடிகை ரஷ்மிகா. இவர் சமீபத்தில்  அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் உடன் ‘அனிமேல்’ எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா தற்பொழுது ‘THE GIRL FRIEND’ புதிய திரைப்படமொன்றில் கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது.

 

இந்நிலையில் நடிகைகளை அசிங்கப்படுத்துவற்காக ஒரு கூட்டம் டீப்ஃபேக் என்ற முறையின் மூலம்  வேறொருவரின் உடலில் நடிகையின் முகத்தை வைத்து டீப்ஃபேக் செய்து அந்த வீடியோவை சில இணையத்தில் வைரலாக்குகின்றனர் .அப்படி தான் தற்போது நடிகை ராஷ்மிகாவிற்கும் நடந்துள்ளது. டீப்ஃபேக் மூலம் ராஷ்மிகாவை அசித்ங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முகம் சுழிக்க வைக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்ட வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ டீப்ஃபேக் தான் என கண்டுபிடித்த ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் இதை கண்டித்துள்ளார். இந்த வீடியோ குறித்து நடிகை ரஷ்மிக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ அந்த வீடியோ எப்படி வைரலாச்சுனு தெரில. போலீஸ் கிட்ட Complaint கொடுத்திருக்கேன் என்றும், அந்த  வீடியோ பார்த்து தான் மிகவும் hurt ஆனதாகவும்’  வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

இதோ அந்த டீப்ஃபேக்  வீடியோ…

Continue Reading
To Top