தென்னிந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த சிக்கந்தர் திரைப்படம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைப் போலவே ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல், அல்லு அர்ஜுன் உடன் இணைந்த புஷ்பா 2, விக்கி கவுசல் உடன் இணைந்து சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சாவா உள்ளிட்ட திரைப்படங்களில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா இருந்து வருகின்றார்.
சினிமாவில் காலூன்ற பல ஆண்டுகள் ஆனாலும் தற்போது தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் ஒரு சூப்பர் ஸ்டாராக தன்னை நிரூபித்துள்ள ராஸ்மிகா ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. இவருக்கு பெங்களூரில் 8 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய ஆடம்பர பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா பறந்த தோட்டத்தில் மரங்களைச் சுற்றி அழகான அமைப்புடன் அமைந்துள்ளது.
இதனைத் தவிர ஹைதராபாத்தில் ராஷ்மிகாவுக்கு ஆடம்பரமான சொத்துக்களும் உள்ளது. சமீபத்தில் கூட கோவாவில் ஒரு பெரிய பங்களாவை ராஷ்மிகா வாங்கி இருந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கு ஓய்வு எடுப்பதற்காக அவர் அந்த பங்களாவை வாங்கியுள்ளார். அதனைப் போலவே அடிக்கடி மும்பைக்கு சென்று வரும் ராஷ்மிகா கடந்த 2021 ஆம் ஆண்டு அங்கு ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கினார். இதனைத் தவிர பல ஆடம்பரமான சொகுசு கார்களையும் ராஷ்மிகா வைத்துள்ளார்.
அதன்படி இந்தியாவில் மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றான எஸ்யூவி ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் காரை வைத்துள்ள நிலையில் இந்த காரின் மதிப்பு சுமார் 1.84 கோடியாகும். அதனைப் போலவே 40 லட்சம் மதிப்புள்ள ஆடி q3 கார் ஒன்றையும் வைத்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் (50 லட்சம்), டொயோட்டா இனோவா மற்றும் ஹிட்டாய் ஆகிய கார்களையும் வைத்துள்ளார். இன்று தனது 29 வது பிறந்தநாளை கொண்டாடும் ராஷ்மிகாவின் மொத்த சொத்து மதிப்பு 66 கோடியாகும். இவர் ஒரு படத்திற்கு நான்கு கோடி முதல் எட்டு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது m