actress rashmika mandanna

பிரபல நடிகர் படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகை ராஷ்மிகா மந்தனா… – ஷாக் ஆன பாலிவுட் ரசிகர்கள்!

By Elango on மாசி 18, 2026

Spread the love

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமணம் வருகிற 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா மார்ச் மாதம் 4ம் தேதி ஐதராபாத்தில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலானது.

திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்தியில் முன்னணி நடிகர் படத்திலிருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா திடீரென விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தார். இந்நிலையில் அவர் இந்த படத்தில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு திருமணம் நடப்பதால் இந்த படத்தில் இருந்து ராஷ்மிகா விலகியதாக கூறப்படுகிறது.