actress rashmika mandanna

விமான நிலையத்தில் வாலிபரை திடீரென கட்டிப்பிடித்த நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா – இப்படி ஒரு அதிர்ஷ்டமா என பொறாமைப்பட்ட ரசிகர்கள்!

By Elango on மாசி 1, 2026

Spread the love

இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் விமான நிலையத்திற்கு நடிகை ராஸ்மிகா வந்தார். அப்போது ராஸ்மிகா புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். அப்போது அவர் நடந்து செல்ல செல்ல பின்னால் சென்ற ஒருவர் அருகில் இருந்த ஒரு போட்டோகிராபரை காட்டி இவருக்கு இன்று பிறந்தநாள் என்று கூறினார். அதைக் கேட்டு ஒரு நொடி அப்படியே நின்ற ராஷ்மிகா அந்த போட்டோகிராபரை அருகில் அழைத்தார்.

அருகில் வந்த போட்டோகிராபரை அன்புடன் கட்டிப்பிடித்து காட் பிளஸ் யு என்று கூறி தனது வாழ்த்துகளை சொன்னார். அவரிடம் உங்களுக்கு இது எத்தனாவது பிறந்தநாள் என்று ராஷ்மிகா கேட்டார். அவர் சற்று வெட்கத்துடன் 24 என்று சொன்னார். உடனே ஐயோ என்று க்யூட் ஆன ஒரு ரியாக்சன் கொடுத்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார் நடிகை ராஸ்மிகா மந்தனா. பிறந்த நாள் கொண்டாடிய போட்டோகிராபருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா என்று சினிமா ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.