இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்பதைக் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் கிரேக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து மிகப் பிரபலமானார். இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் பின்னர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் தற்போது வரை இரண்டு படங்களில் மட்டும் நடித்திருக்கும். இவர் சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்த வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் தெலுங்கு மொழிகளில் பிஸியாக இருந்தாலும் அதைவிட ஹிந்தி மொழியில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
ஹிந்தியில் இவர் கடைசியாக நடித்த அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. அந்த திரைப்படத்தில் மிக போல்டான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ்-ஆக வலம் வரும் இவர் பல இளைஞர்களின் கனவு கனியாக இருந்து வருகின்றார்.
தெலுங்கில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது. சமூகவலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் சிறுவயதில் கூட செம க்யூட்டாக இருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள்.