பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்தார். முதல் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் ராஷ்மிகா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஹிந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ராஷ்மிகா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா 14 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எங்கு ஆடிஷன் நடந்தாலும் சென்று விடுவேன். ஆடிஷன் முடிந்து வீட்டிற்கு வரும்போது அழுது கொண்டே தான் வருவேன். ஆடிஷன் செய்தவர்கள் கதைக்கு நான் பொருத்தம் மற்றவள் என கூறி இருந்தால் பரவாயில்லை. ஆனால் நடிகைக்கான முகமே எனக்கு இல்லை என கூறி நிராகரித்து விட்டனர்.

அப்படி 20 முதல் 25 அடிஷனல் வரை கலந்து கொண்டு வீட்டுக்கு தான் வந்தேன். எனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயற்சித்தேன். ஒரு படத்தில் நடிக்க செலக்ட் ஆகி 3 மாதங்கள் அந்த படத்திற்கான பயிற்சி நடந்தது. அந்த படமும் முற்றிலுமாக கைவிடப்பட்டது. சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்து இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன் என ராஸ்மிகா தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் பற்றி பேசி உள்ளார்.

