‘நான் இனிமேல் சேலை தான் கட்டப்போறேன்’…. கியூட் லுக்கில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகை ரஷ்மிகா…

By Begam

Published on:

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று கொண்டாடுகிறார்கள். சினிமாவிற்கு முன்பு மாடலிங்கில் இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

   

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

தற்பொழுது தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். நடிப்பில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்பொழுது பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது உண்டு. அந்தவகையில் தற்பொழுது இவர் தனது உதவியாளர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.