நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவரைப்போலவே நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் இறுதியாக குஷி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ராஸ்மிகா மந்த்னா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி இருவரும் இதுவரை எந்த பேட்டியும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை.

சமீபத்தில் இருவரும் ஒரே மாதிரி கூலிங் கிளாஸை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் ஒரே உடை அணிந்த வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் நடந்த தேர்தலில் நடிகர் விஜய் தேவர்கொண்டா ஒரு பனியன் அணிந்து வந்திருந்தார். அதேபோல தற்பொழுது நடிகை ரஷ்மிகா உடை அணிந்து ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார். தற்பொழுது இதனை இணைத்து நெட்டிசன்கள் அவர்கள் தங்களது காதலை உறுதிப்படுத்துவதாக கூறி வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
