தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் தான் நடிகை ரஞ்சிதா. இவருடைய குடும்பம் சினிமா குடும்பம் என்பதால் இவருக்கு சினிமாவில் வருவதற்கு ஆர்வம் இருந்தது என சொல்லிவிட முடியாது. பெங்களூரில் படித்துக் கொண்டிருந்தபோது சட்டம் அல்லது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று அதற்காக ரஞ்சிதா ஆர்வத்துடன் படித்த நிலையில் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது. நடித்துப் பார்க்கலாம் நமக்கு செட்டாகவில்லை என்றால் மீண்டும் படிக்கச் சென்று விடலாம் என்ற சிந்தனையுடன் சினிமாவில் நுழைந்த ரஞ்சிதா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் திரைப்படத்தில் பூங்குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல் மரியாதை பட ராதாவை நினைவு படுத்தினார்.
17 வயதிலேயே அதுவும் முதல் படத்தில் ஒரு அழுத்தமான ரோடில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். முதல் படத்திலேயே கதாநாயகியாக வலம் வந்த ரஞ்சிதாவுக்கு முதல் படமே பெயர் சொல்லும் படமாக அமைந்ததை தொடர்ந்து 1990 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து ஜெய் ஹிந்த், அமைதிப்படை, தோழர் பாண்டியன், கருப்பு நிலா, கர்ணா, சின்ன வாத்தியார் மற்றும் பொம்மலாட்டம் என அடுத்தடுத்த பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். குறிப்பாக இவர் நடித்த படத்தின் பாடல்கள் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று கூறலாம். முத்தம் தர ஏத்த இடம், மலரே மௌனமா, சொல்லிவிடு வெள்ளி நிலவே போன்ற பாடல்கள் இன்றைய இலசுகளும் முணுமுணுக்கும் பாடல்களாக உள்ளது.
ஹோம்லிக்கு ஹோம்லி கிளாமருக்கு கிளாமர் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் ரஞ்சிதா மிரட்டி விடுவார். தமிழை தவிர்த்து தெலுங்கு மற்றும் மலையாளம் என ஒரு ரவுண்டு வந்த ரஞ்சிதா ராகேஷ் மேனன் என்ற ஆர்மி அதிகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவர் குழந்தை என சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். அதன்பிறகு விஜய் நடித்த வில்லு படத்தில் ஃப்ளாஷ் பேக் கதையில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி தன் வேலை உண்டு தான் உண்டு என இருந்த ரஞ்சிதா ஒரே நைட்டில் உலகமே விமர்சனம் செய்யும் நடிகையாக மாறினார்.
அதாவது நித்யானந்தாவுடன் இவர் இருக்கும் சில வீடியோக்கள் வெளியாகி இவருடைய பெயரை டேமேஜ் செய்தது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று இவர் விளக்கம் அளித்தார். பிறகு தனது காதல் கணவரை பிரிந்த நெருக்கடியாக இருந்த ரஞ்சிதா ஆன்மீகவாதியாக மாறி நித்தியானந்தாவின் பக்தை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் ரஞ்சிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ஜுருடன் இணைந்து நடித்த கர்ணா திரைப்படத்தில் இடம் பெற்ற மலரே மௌனமா பாடல் காட்சியில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், கர்ணா படத்தில் இடம்பெறும் மலரே மௌனமா பாடலை டைரக்டர் என்கிட்ட போட்டு காட்டினார். அந்தப் பாட்டு டூயட் பாடுற மாதிரி இருந்ததால் நான் டைரக்டர் கிட்ட சண்டை போட்டேன். எனக்கு இந்த படத்துல இருக்கிறதே ஒரே ஒரு பாட்டு தான் அதையும் நீங்க இப்படி வச்சா எப்படி என்று வேண்டா வெறுப்பா பேசினேன்.
அந்தப் பாட்டு ஜெய்ஹிந்த் படத்துல இடம்பெற வேண்டிய பாட்டு. ஆனா சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து எடுத்து விட்டதால் கர்ணா படத்தில் வைத்தார்கள். நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் டைரக்டர் சார் நீ வேணும்னா பாரு இந்த பாட்டு கட்டாயம் செம ஹிட் ஆகும் என்று சொன்னாரு. அந்த சமயத்துல இன்னொரு படத்தின் சூட்டிங்காக நான் வெளியில் சென்றதால் என்னிடம் கேசட் கொடுத்து அனுப்பி வச்சாரு. ஒரு மாசம் நல்லா கேட்டு ரிகர்சல் பண்ணிட்டு வா என்று சொல்லி அனுப்பி வச்சாரு. அதன் பிறகு அந்தப் பாடலின் படப்பிடிப்பில் நடிக்கும் போது என்ன வற்புறுத்தி நடிக்க வச்ச மாதிரி எந்த ஃபீலும் எனக்கு வரல. ஒரு மாசம் கேட்டு கேட்டு நல்லா மூவ்மெண்ட் எல்லாம் ட்ரெயின் பண்ணதால் நடிக்கிற பீலே இல்லாம தான் அந்த பாட்டுல நடிச்ச என்று ரஞ்சிதா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…
தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக-விற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான 10 ஆண்டுகால கூட்டணி…