தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரையில் சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக விஜய் டிவியில் புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதன்படி சமீபத்தில் விஜய் டிவியில் நீ நான் காதல் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பூங்காற்று திரும்புமா என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று விஜய் டிவியில் இருந்து தென்றலே மெல்ல பேசு என்ற சீரியல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. இந்த சீரியலின் ப்ரோமோவை பார்க்கும் போது ஏற்கனவே வந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் கதை போல உள்ளது.
ஒருவேளை அதனை பார்ட் 2 ஆக எடுக்கப் போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதில் வெற்றி என்ற வினோத் பாபு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக புதிதாக ஹீரோ ஹீரோயின்களை கூட்டிட்டு வந்து விஜய் டிவி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கதையும் கிட்டத்தட்ட துணிச்சலுடன் இருக்கும் ஹீரோயின் ரௌடியாக சுற்றும் ஹீரோவை சுற்றி தான் கதை நகர போகின்றது. இந்த சீரியலின் சூட்டின் ஆரம்பம் ஆகிவிட்ட நிலையில் அடுத்த மாதத்தில் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆனால் இந்த சீரியலுக்கு பதில் மற்றொரு சீரியலை முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி முடிவு செய்துள்ளது. அதாவது விஜய் டிவியில் கிட்டத்தட்ட இரண்டு வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னி சீரியல் தான் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியல் இரண்டு வருடமாக ஓடினாலும் பெரிதாக டிஆர்பி ரேட்டில் இடம் பெறவில்லை. அத்துடன் எதிர்பார்த்த வரவேற்பும் கிடைக்காததால் அந்த சீரியலை முடிக்கலாம் என்று விஜய் டிவி முடிவு செய்துள்ளது. இந்த சீரியலின் கதைகள் தற்போது முடிவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் கிளைமேக்ஸ் காட்சி ஒளிபரப்பாக உள்ளது.
திமுகவின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, காங்கிரசுடன் நிலவி வரும் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி…
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.…
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் …
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குப்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்து தோளில் பையுடன் இருக்கும் சிறுவன் ஒருவன், வெயிலின்…