ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார். இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.

இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

கடந்த சில ஆண்டுகளாக அவர் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரின் திருமணம் ரிஷிகேஷியில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் ரம்யா பாண்டியன் தனது வருங்கால கணவருடன் இணைந்து திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஸ் நடத்தி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரம்யா பாண்டியன் செல்லத்திற்கு கல்யாணமா என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
