நடிகை ரம்யா கிருஷ்ணன் கிடையாதாம்… ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதாவாக முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகையாம்…

By Begam on மாசி 17, 2024

Spread the love

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு பிரம்மாண்ட படம்தான் பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் வசூலை மட்டுமல்லாமல் பல விருதுகளையும் வாரி குவித்தது.

   

பாகுபலி படத்தின் வசூல் 10 நாட்களில் 1000 கோடியை தாண்டியது  குறிப்பிடத்தக்கது.  இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பாகுபலி மட்டுமின்றி மற்ற துணை கதாபாத்திரங்களுக்கும்தான். ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும்,  ஏன் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

   

 

முதல் பாகத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து இருந்த ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிகவும் பாராட்டினார்கள்.ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் அந்த  முதலில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை தான் ராஜமவுலி அணுகி இருக்கிறார்.

#image_title

ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அதிக நிபந்தனைகள் விதித்தாலும் ராஜமௌலி தன் முடிவை மாற்றி கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி ராஜ மாதாவாக கலக்கியுள்ளார்.