Connect with us

53 வயதிலும் குறையாத அழகு.. ராஜமாதாவின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

CINEMA

53 வயதிலும் குறையாத அழகு.. ராஜமாதாவின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

பிரபல முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தென் இந்திய ஃபிலிம் பேர் விருதுகள், தமிழக அரசின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். கடந்த 1985-ஆம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் ஒய்.ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு திரைப்படத்தின் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மா இவங்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம் வைரல்!  – News18 தமிழ்

ரம்யா கிருஷ்ணன் நடித்த கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா, பஞ்சதந்திரம், பாறை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகர்களான சரத்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், அமிதாப்பச்சன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரம்யா கிருஷ்ணன் புகழின் உச்சிக்கு சென்றார்.

   

Photo posted by Ramya Krishnan .. Viralizing fans | ரம்யா கிருஷ்ணன்  வெளியிட்ட புகைப்படம்.. வைரலாக்கும் ரசிகர்கள்

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அவரது கதாபாத்திரம் மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த படங்களின் பட்டியலில் ஜெயிலர் மூன்றாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்! - கூடல் | Tamil Koodal

இப்போது ரம்யா கிருஷ்ணனுக்கு 53 வயது ஆகிறது. ஆனாலும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top