6 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்… அதுவும் எந்த சீரியல் தெரியுமா…? 

By Begam on புரட்டாதி 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில்  ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

   

 

   

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிப்பதில் ரம்யா கிருஷ்ணன் நிகர் வேறு யாரும் இல்லை. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்ன திரையில் சீரியல்களிலும், பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இதுவரை 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

இதை தொடர்ந்து அவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து வெள்ளித்திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள சீரியல் நளதமயந்தி. இந்த சீரியலில் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடிக்க, நந்தா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த சீரியலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் அம்மன் கெட்டப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.