கமல் சார் கூட அந்த சீன் நடிக்க நான் பட்ட பாடு இருக்கே, முடியல.. முதல்முறையாக மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்..

By Nanthini on தை 28, 2025

Spread the love

ரம்யா கிருஷ்ணன் இந்தியாவின் பிரபலமான நடிகை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யசபா சோ ராமசாமி அவர்களின் மருமகள் தான் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றை முறையாக கற்று தேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். பின்னர் ரஜினிகாந்தின் படிக்காதவன் கமல்ஹாசன் நடித்த பெயர் சொல்லும் பிள்ளை போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். ஆனாலும் 1980களில் இவர் தோல்வி நடிகையாகவே இருந்தார். எந்த ஒரு படமும் இவருக்கு கை கொடுக்கவே இல்லை.

நீச்சல் உடையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்  - Cinemapettai

   

பிறகு 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் மிகப் பிரபலம் அடைந்தார். அதற்கு அடுத்ததாக சினிமாவில் ஏறு முகத்தையே கண்ட ரம்யா கிருஷ்ணன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். அம்மன் கடவுள் வேடங்கள் இவருக்கு பொருத்தமாக இருந்ததால் ராஜகாளியம்மன் நாகேஸ்வரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அன்னை காளிகாம்பாள் உள்ளிட்ட பல பக்தி திரைப்படங்களில் அம்மன் வேடங்களில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இதனால் பெண்களின் ஆதரவை பெற்றார். இது மட்டுமில்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜ மாதா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன் 52 வயதிலும் பிசியாக நடித்து வருகிறார்.

   

TSK's Ramya Krishnan reveals all! | JFW Just for women

 

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் 1984 ஆம் ஆண்டு சினிமாவில் பயணிக்க தொடங்கி இருந்தாலும் சினிமாவில் எனக்கென தனி ஒரு அங்கீகாரம் கிடைத்தது 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு தான். கே. தெலுங்கு சினிமா தான் என்னை ஒரு நடிகையாக இந்த திரை உலகிற்கு காட்டியது. வானமே எல்லை முதல் வருஷம் உள்ளிட்ட படங்களை நடித்த பிறகுதான் எனக்கு சினிமாவில் தனி ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று பேசிய ரம்யா கிருஷ்ணன் கமலுடன் நடித்த அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். அதாவது கமல்ஹாசன் உடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த திரைப்படம் தான் பஞ்சதந்திரம் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் மேகி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கமல்-கவுதமி பிரிவு: எரிந்த தீயில் எண்ணெய் ஊற்றிய ரம்யா கிருஷ்ணன்? | Is she  also the reason for Kamal-Gautami split? - Tamil Filmibeat

இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி உள்ள ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசன் சார் முன்னாடி எவ்வளவு பெரிய ஹீரோயினும் நடிக்கிறதுக்கு ரொம்ப தயங்குவாங்க. பஞ்சதந்திரம் படத்தில் மேகி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது பாடி மூவ்மெண்ட் எல்லாம் கமல் சார் தான் சொல்லிக் கொடுத்தார். அவர் பண்ணதுல பாதி நளினம் கூட எனக்கு வரவே இல்ல. குறிப்பா ஒரு காட்சியில் பாடி நளினம் எல்லாம் வந்து பேசிக்கிட்டே கமல் சார அந்தப் பக்கமா தள்ளிவிடும் காட்சியில் அவர் கூட நடிக்க நான் ரொம்ப அவஸ்தப்பட்டன் என்று ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார்.