தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிப்பதில் ரம்யா கிருஷ்ணன் நிகர் வேறு யாரும் இல்லை. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்ன திரையில் சீரியல்களிலும், பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
இதுவரை 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து அவர் ரஜினி கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டாருக்கு மனைவியாக நடித்து அசத்தினார்.
தற்பொழுது 53 வயதை எட்டியுள்ள இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…