actress rambha

16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – மீண்டும் ‘அழகிய லைலா’ வை திரையில் காண ரசிகர்கள் ஆர்வம்!

By Elango on மாசி 18, 2026

Spread the love

கடந்த 1990களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. உள்ளத்தை அள்ளித் தா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரம்பா அறிமுகமானார். அதில் வந்த அழகிய லைலா பாடலை இப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாது. தொடர்ந்து ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ரம்பாவுக்கு தொடை அழகி என்ற சிறப்பு பட்டப் பெயரும் ரசிகர்கள் மத்தியில் உண்டு.

கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திர ரகுமாரை ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுமார் 16 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த ரம்பா அவ்வப்போது டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ களில் நடுவராக பங்கேற்று வந்தார். இப்போது விரைவில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிகிறார்.

   

இதற்காக உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு கடைப்பிடித்து ஸ்லிம் ஆக மாறியுள்ள நடிகை ரம்பா, சில இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். அதில் ஓரிரு கதைகளை அவர் தேர்வு செய்துள்ளதால் விரைவில் அந்த படங்களில் ரம்பா நடிக்க உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வெளியான பெண் சிங்கம் படம் தான் ரம்பா கடைசியாக நடித்த படம். அதன்பிறகு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 49 வயதில் ரம்பா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.