#image_title
சின்னத்திரை நடிகை கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து இளவரசி, சரவணன் மீனாட்சி, நொச்சிபுரம், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் ரச்சிதா நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஜாதா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ரச்சிதா அறிமுகம் ஆனார். தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரச்சிதா பிரபலமானார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.தற்போது ரங்கநாயகா என்ற கன்னட படத்தில் ரட்சிதா ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ரக்ஷிதா, “லைக் குறைந்தால் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ர்கள் ஆபாச வீடியோக்கள் போடுவது தானாக குறையும். நீங்க அவர்களை encourage பண்ணாதீங்க. அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஆபாச வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள்.
இதனால் சாலையில் செல்லும் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களின் ஆடை விஷயத்தால் பாலியல் குற்றங்கள் நடப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் தான் நடக்கிறது என்று சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…