#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் அண்ணாமலை அறிவுரையால் விஜயா மனம் மாறுகிறார். ரோகிணி மனோஜ் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொள்கிறார் விஜயா. ரோகிணிக்கு மனோஜ் மீது இருக்கும் கோபம் குறையவில்லை. தனக்கு சப்போர்ட் செய்யாமல் அடி வாங்க விட்டு விட்டானே என்ற கோபம் இருக்கிறது. அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.
இனி இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலையிடம் புது விஷயத்தை கூறுகிறார். அதாவது அண்ணாமலையை ஷோரூமின் ஓனராக ஆக்க வேண்டும் என்று பேசுகிறார். நீங்க எல்லாரும் சமாதானமானது ஓகே அது சந்தோசம் ஆனா ஷோரூமோட ஓனர மாத்தணும் என்று கூறுகிறார். உடனே மனோஜ் என்னடா ஷோரூமை ஆட்டைய போட பாக்குறியா என்று கேட்கிறார்.
எனக்கு ஒன்னும் பணத்தை மேல ஆசை கிடையாது. ரவிக்கும் ஆசை கிடையாது. நீ எங்கேயாவது போய் யார்கிட்டயாவது ஏமாந்துட்டு வந்துடுற அதோட நீ ஷோரூம் ஆரம்பிச்சது உன் மாமனார் காசு இல்ல அப்பாவோட காசு அவரோட 35 வருஷம் உழைப்பு. அதனால ஓனர் அப்பா தான். இனிமேல் அப்பா தான் கடைக்கு ஓனரா வந்து இருப்பாரு நீ படிச்சிருக்கல்ல நீ மேனேஜரா இருந்துக்கோ என்று கூறுகிறார்.
இதை கேட்ட ரோகிணி மனோஜ் விஜயா மூவரும் ஷாக்காகி நிற்கிறார்கள். இதுதான் சரியா வரும் நாளைக்கு எல்லாம் ஏற்படும் நான் பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு முத்து சென்று விடுகிறார். பிறகு ரூமில் மனோஜிடம் சண்டையிடுகிறார் ரோகிணி. உன்னை போய் ஓனராக்கி பாக்கணும்னு இவ்ளோ ரிஸ்க் எடுத்து நான் பிளான் பண்ணி செஞ்சிருந்தா நீ என்னையே விட்டுக் கொடுத்துட்டு அடி வாங்க விட்டுட்டு நீ ரசிச்சிட்டு இருக்கல என்று சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அடுத்ததாக மறுநாள் காலை முத்து தனது நண்பருக்கு போன் செய்து மாலை எல்லாம் ரெடி பண்ணி கொண்டு வா என்று கூறுகிறார். உடனே அண்ணாமலை என்னடா சீரியஸா தான் நீ சொல்லிட்டு இருக்கியா என்று கேட்கிறார். ஆமாப்பா இந்த மனோஜ்க்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது தேவையில்லாம எங்கேயாவது போய் மாட்டிகிட்டு ஏமாந்துட்டு தான் வரான். இந்த ஷோரூமும் அவன் கைய விட்டு போயிறக்கூடாது கொஞ்ச நாள் நீங்க அங்க இருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கோங்க என்று கூறுகிறார்.
உடனே அண்ணாமலையும் விஜயாவிடம் முத்து சொல்வது சரியா தான் இருக்கு என்று கூறிவிட்டு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். உடனே விஜயா ரோகினி மனோஜ் ரூமுக்கு வந்து இருவரிடமும் பேசுகிறார். நீங்க செஞ்ச தப்பு என்கிட்ட உண்மையை மறைத்தது தான். என்கிட்ட உண்மையை சொல்லி இருந்தா நான் வீட்ல தெரியாம நான் பார்த்திருப்பேன் அப்படியே பிரச்சினை வந்திருந்தாலும் நான் சமாளிச்சு இருப்பேன்ல என்று சொல்லுகிறார்.
உடனே ரோகிணி நேரம் வரும்போது சொல்லணும் தான் இருந்தோம் ஆன்ட்டி அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு என்று கூறுகிறார். இப்போ பாரு அந்த முத்து சும்மாவே இருக்க மாட்டான். எப்படி பண்ணிட்டான் பாரு எல்லாத்துக்கும் காரணம் இந்த 27 லட்சம் பணம் தான். நீ உடனே உங்க மாமாவுக்கு போன் செய்து மலேசியாவில் இருக்கும் உங்க அப்பாட்ட 27 லட்ச ரூபா பணத்தை அனுப்ப சொல்லு. அவங்க மூஞ்சிலேயே விட்டு எறிஞ்சிடலாம். அப்புறம் நீங்களே பழையபடி ஓனரா இருந்துக்கலாம் என்று புதிய திட்டத்தை கூறுகிறார் விஜயா. இதைக் கேட்ட ரோகிணி ஆடி போய் இருக்கிறார். இது என்னடா புது பிரச்சனையா போச்சு என்று இருக்கிறாள். அதோட இன்றைய எபிசோடு முடிந்தது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…