முதல் படத்திலேயே இப்படியா…? அட்வைஸ் கொடுத்த பயில்வான் ரங்கநாதன்…! மேடையிலேயே நடிகை சொன்ன பதில்….! ஒரே வார்த்தையில் ஆப் பண்ணிட்டாங்களே…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2025

Spread the love

இயக்குனர் வி கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் மருதம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரக்ஷனா ஹீரோயினாக நடித்துள்ளார். அருள்தாஸ், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகர் விதார்த் கூறியதாவது, படம் நன்றாக வந்திருக்கிறது. நாயகி ரக்ஷனா, சிறுவனாக நடித்த பையன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது என கூறியுள்ளார்.

இந்த விழாவின்போது பயில்வான் ரங்கநாதன் ரக்ஷனாவை பார்த்து “உங்களுக்கு இது முதல் திரைப்படம். அதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து விட்டால் அடுத்த படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரக்ஷனா “நான் இரண்டாவது படத்தில் நடித்து விட்டேன். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த படத்தின் இயக்குனர் என்னை கூப்பிட்டு இது போன்ற கேள்வியை கேட்கவில்லை” என பதில் அளித்தார்.

   

உடனே பயில்வான் ரங்கநாதன் “நான் உனது நன்மைக்காகத்தான் கூறுகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி நடித்ததால் தான் அவருக்கு பட வாய்ப்பு இல்லை” என அட்வைஸ் கொடுப்பது போல கூறியதும், ரக்ஷனா பதிலுக்கு “ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். அந்த படத்தின் மூலம் அவருக்கு எவ்வளவு பெயர் கிடைத்தது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

   

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என்று சினிமாவில் ஒரு தனி பெயர் உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த விட்டால் தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்ற ரூல் இருக்கிறது. அந்த ரூலை யாராவது பிரேக் செய்ய வேண்டும். அதை உடைக்க சினிமாவிற்கு யாராவது வர வேண்டும். அது நானாகவே இருப்பேன்” என கூலாக பதில் அளித்தார். அவரது பேச்சு சோசியல் மீடியாவில் பாராட்டுகளை குவித்து வருகிறது.