தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் சில ஷாட்களில் நடித்திருப்பது ரஜினியே இல்லை என்றும் டூப் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கிள்ம்ப்ஸ் வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதில் ரஜினிகாந்த் நடித்துள்ளதை உறுதி செய்தது.
ரஜினிகாந்த் திரையில் மாஸ் மகாராஜாவாக வலம் வந்தாலும் எப்போதும் நிஜ வாழ்க்கையில் மிக எளிமையானவர். நடிகர்கள் புறத்தோற்றத்துக்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்வது வாடிக்கை. ஆனால் ரஜினிகாந்த் தன்னுடைய வழுக்கைத் தலையோடு வெளியே வருவதற்கு எப்போதும் தயங்குவதில்லை.
இந்நிலையில் ரஜினிகாந்தின் எளிமை பற்றி நடிகை ராதிகா ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒரு நிகழ்ச்சியில் ரஜினி சாரை, லதாவோடு பார்த்தேன். அப்போது ரஜினி சார் சாதாரண ரப்பர் செருப்பு அணிந்திருந்தார். வெளியில்தான் சூப்பர் ஸ்டார். ஆனால் ரப்பா செருப்பா என்று கேட்டு நக்கலடித்தேன். அதில் இருந்து எப்போது என்னை அவர் பார்த்தாலும், கீழே குனிந்து தன் காலைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்” எனக் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…