இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதற்காக ஒரு கோடியில் பிரத்தியேகமாக செட் அமைக்கப்பட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பூஜை போட்டிருந்தார். அதனைப் போலவே முதல் முறையாக லைவாக மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. அப்படி எடுக்கப்பட்ட இந்த காட்சியை படத்தில் இடம் பெறும் எனவும் கூறப்பட்டது. இந்த பிரம்மாண்ட பூஜையில் மூக்குத்தி அம்மன் 2 படம் இயக்குனர் சுந்தர் சி மற்றும் நயன்தாராவை தவிர மீனா, குஷ்பூ, யோகி பாபு மற்றும் கே எஸ் ரவிக்குமார் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நிகழ்ச்சியில் நயன்தாரா ஓவராக ஆட்டிடியூட் காட்டியதாகவும் நடிகை மீனாவை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் வந்தது. 90களில் தென்னிந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய மீனா மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அவருக்கு ஒரு ஹாய் கூட நயன்தாரா சொல்லவில்லை என கூறப்படுகிறது.
குஷ்பூ மற்றும் மீனா இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்த போது குஷ்பூவை கட்டி அணைத்த நயன்தாரா மீனாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிறு புன்னகை கூட செய்யாததால் நயன்தாரா ஓவர் பில்டப் காட்டியதாக அவர் மீது விமர்சனம் விழுந்தது. அருகில் இருந்தும் மீனா விடம் அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. இந்நிலையில் மீனா நயன்தாராவிற்கு மறைமுகமாக அதுவும் மூஞ்சியில் பல்லாரி என அடித்தது போல் பதிலடி கொடுத்துள்ளார்.
மீனா தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் நிறைய ஆடுடன் இருக்கும் சிங்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்து எப்போதும் தனியாக இருக்கும் சிங்கம் ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது என்ன சொல்கிறது என்று எதைப் பற்றியும் கவலைப்படாது என பதிவிட்டுள்ளார். மேலும் உங்களது நல்ல உள்ளத்தை மட்டும் எண்ணி பெருமை கொள்ளுங்கள் எல்லோரிடமும் அது இருக்காது என்று மற்றொரு பதிவையும் மீனா போட்டுள்ளார். இந்த இரண்டு பதிவையும் பார்க்கும்போது நயன்தாராவை மீனா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…