actor Rajinikanth

அந்த பயம் இருக்கட்டும்…. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் மிரட்டிய பிரபல நடிகை – அவரே தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

By Elango on மாசி 16, 2026

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, நான் ரஜினி கூட நிறைய படம் பண்ணியிருக்கேன். ஒரு தடவை பங்க்சனுக்கு வந்த போது ரஜினிகாந்த் ரப்பர் ஸ்லிப்பர் போட்டுட்டு வந்திருந்தார். நான் அவரிடம், நீங்க நடிகர்தானே? சூப்பர் ஸ்டாருன்னு எல்லாரும் சொல்றாங்க என்றேன். அதுக்கு அவர் யா யா என்று வேகமாக சொன்னார்.

அப்புறம் இது என்னா செருப்பு இது என்று நக்கலாக கேட்டு சிரித்தேன். அதுக்கு அப்புறம் அவர் எங்கு வந்தாலும் நான் இருந்தேன்னா முதலில் என்னை பார்த்துட்டு அப்புறம் அவர் காலில் இருக்கிற செருப்பை தான் பார்ப்பார். அந்த பயம் எப்பவும் இருக்கட்டும் என்று நான் அவரிடம் கிண்டலாக சொல்வேன்.

   

கொஞ்சநாளைக்கு முன்னாடி இப்போ லண்டனுக்கு ஒரு ஷூட்டிங் போனப்போ, ரஜினி அங்கு இருந்தார். அப்போ ஷூ போட்டிருந்தார். நான் அவரிடம், ரஜினி ஷூ போட்டிருக்கீங்க என்றேன். அவர் உடனே பதறிப் போய், ஆமா கரெக்டா போட்டிருக்கேன் கரெக்டா போட்டிருக்கேன் என்று வேகமாக சொன்னார் என்று நடிகை ராதிகா சரத்குமார் அந்த நேர்காணலில் ஜாலியாக பேசியிருக்கிறார்.