Categories: CINEMA

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. திரையுலகில் பாசமலர் என்று கூறினால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் சாவித்திரி தான். சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் கூட பிறந்த அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தவர்கள்.

இதற்கு அடுத்ததாக கூற வேண்டும் என்றால் சிவக்குமார் ராதிகா தான். இவர்கள் இருவருக்கும் இடையிலான பாசப்பிணைப்பு அந்த அளவுக்கு வலுவானது. ராதிகாவும் சிவகுமாரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பாசப்பறவைகள் திரைப்படத்தில் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள். அதைத்தொடர்ந்து சித்தி சீரியலிலும் ராதிகா சரத்குமார் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜத்திலும் சகோதர சகோதரிகளே போல பழகி வருகிறார்கள். திரை வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் ராதிகா பிஸியாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் ராதிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் காலில் அடிபட்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவரை பார்ப்பதற்கு சிவக்குமார் சென்று இருக்கின்றார்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ராதிகா கூறியதாவது: “காலில் அடிபட்டு குணமாகி வரும் என்னை பார்க்க இன்று அண்ணன் சிவகுமார் வந்திருந்தார். அவருடனான வாழ்க்கை பந்தம், எப்போதும் மறக்க முடியாது. பழைய நாட்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பார்த்து பல நினைவுகளை நினைவு கூர்ந்தோம் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago