‘திரையுலகின் சிங்கம்’…  தனது 60- வது பிறந்தநாளை சீரியல் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை ராதிகா… நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்ட வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள், பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பரான இவர் ஆரம்ப காதலத்தில் விஜய்யுடன் இணைந்து ஒருசில படங்களில் துணை நடிகராக தனது நடிப்பை தொடங்கினார். அதன்பிறகு சின்னத்திரை பக்கம் வந்த நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம் தொடர் மூலம் முழுநேர சீரியல் நடிகராகவே மாறிவிட்டார்.

   

இவர் தற்பொழுது சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில்  பிசியாக  நடித்துவருகிறார் சஞ்சீவ். நடிகர் சஞ்சீவும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் உள்ளனர். தற்பொழுது ப்ரீத்தி சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார்.பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் கலைஞர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இன்று நடிகை ராதிகா தனது 60- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 80′ ஸ்களில் முன்னணி நடிகையாக வலம்  வந்த இவர் தற்பொழுது வரை பிசியாக நடித்துக் கொண்டுள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள்  பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தற்பொழுது நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா கலைஞர் டிவி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ராதிகா கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு  செய்து அவருக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ  அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)