Connect with us

‘என்னோட மகள் என்ன செய்றான்னு பாருங்க’… மகளுக்கே தெரியாமல் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை ராதா…  வீடியோ வைரல்…

CINEMA

‘என்னோட மகள் என்ன செய்றான்னு பாருங்க’… மகளுக்கே தெரியாமல் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை ராதா…  வீடியோ வைரல்…

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தான் நடிக்க வந்த 6 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடித்தது மட்டும் அல்லாமல் பத்து ஆண்டுகளில் 162 படங்களுக்கு மேல் நடித்து  சாதனையும் படைத்துள்ளார்.

நடிகை ராதா ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1991ஆம் ஆண்டு வெளிவந்த ‘Innathe Program’ எனும் மலையாள படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

   

 

இதை தொடர்ந்து இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும்  நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ராதா.

இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் தனது மகள் தன்னைப் போன்றே விருந்தினர்களை உபசரிப்பதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தன் மகளுக்கே  தெரியாமல் நடிகை ராதா எடுத்த இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Radha (@radhanair_r)

Continue Reading
To Top