14 வயசுல ‘கடல்’ படத்தில் ஹீரோயின நடிச்ச ராதாவின் மகளா இது..? குண்டாகி ஆளே அடையாளம் தெரியலயே.. Birthday கிளிக்ஸ்..

By Begam on கார்த்திகை 11, 2023

Spread the love

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகை ராதா. இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல் மற்றும் ரஜினி உடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து பிரபல நடிகை ஆக வலம் வந்தார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின்  ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து 1991ல்  ராஜசேகரன் என்பவர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

   

 

முதல் மகள் கார்த்திகா ஜீவா உடன் ‘கோ’ படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு கதை தேர்வில் சொதப்பி சிறந்த கதைகளை தேர்வு செய்யாமல் சினிமாவில் இருந்து விலகினார்.

இவரை தொடர்ந்து இளைய மகள் துளசி 14 வயதிலேயே மணிரத்தினம் இயக்கிய  ‘கடல்’ படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு ஜீவாவுடன் ‘யான்’ படத்தில் நடித்தார். இந்த படமும் தோல்வியடைந்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, படிக்க சென்று விட்டார்.

இதை தொடர்ந்து, தற்போது துளசியின் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவரின் 24 ஆவது பிறந்தநாள், மிகவும் எளிமையாக பெற்றோருடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களில்  நடிகை துளசி நாயர் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.  இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.