தன்னுடைய மிக பெரிய ரசிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த நடிகை ரச்சிதா.. வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on மார்ச் 25, 2024

Spread the love

ரட்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான உப்பு கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரட்சிதா பிரபலமானார்.

   

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, ஸ்டார் ஸ்வர்ணாவில் ஒளிபரப்பான கீமாஞ்சலி உள்ளிட்ட தொடர்களில் ரச்சிதா நடித்துள்ளார். பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். ரச்சிதா சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

#image_title

 

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட தினேஷ் தனது மனைவியுடன் சேர விருப்பம் இருப்பதை மறைமுகமாக கூறிக் கொண்டே இருப்பார். எது எப்படி இருந்தாலும் இன்னொரு புறம் ரச்சிதா கன்னடத்தில் ரங்கநாயகா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகர் ஜக்கேஸ் நடிக்கிறார். இந்த நிலையில் தனது ரசிகைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது பிறந்தநாளை ரட்சிதா சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.