விரைவில் டும் டும் டும்.. திருமணத்தை அறிவித்த நடிகை பிரியா பவானி சங்கர்.. எப்போது தெரியுமா..?

By admin on ஆவணி 7, 2024

Spread the love

பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கல்யாண முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் பிரியா பவானி சங்கர் பிரபலமானார். முதன்முதலாக இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரிலீஸ் ஆன மேயாத மான் திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்தார்.

   

இந்த இந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

 

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் வருகிற 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்த அடுத்த படங்களில் பிரியா பவானி சங்கர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனா திருமணம் எப்போது என பிரியா பவானி சங்கரனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர் உண்மையிலேயே திருமணம் தாமதம் ஆகி கொண்டிருப்பதற்கு சோம்பேறித்தனம் தான் காரணம். வெட்டிங் பிளான் பண்ணனும், பர்ச்சேஸ் பண்ணனும் நிறைய வேலை இருக்கு. ஒருவேளை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செய்து வைங்கன்னு சொல்லி இருந்தா இந்நேரம் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் அடுத்த ஆண்டு திருமணம் பண்ண பிளான் செய்துள்ளோம். முதல்முறையாக இப்போது தான் அதை கூறுகிறேன் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.