தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை பிரியா ஆனந்த். சென்னையில் பிறந்து வளர்ந்த இவருடைய அம்மா ஆந்திராவை சேர்ந்தவர். சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பிரியா ஆனந்துக்கு இருந்துள்ளது. நடிகையாக வேண்டும் என்று நினைக்காமல் இயக்கத்தில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. நடிகையாக மாற வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்தது கிடையாது. இதனால் பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்து முடித்த அவர் ஒரு கட்டத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
அப்படியே சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். இவர் வாமனன் என்ற தமிழ் திரைப்படத்தில் தான் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என்று மாறி மாறி நடிக்க தொடங்கினார். எதிர்நீச்சல், அரிமா நம்பி, வணக்கம் சென்னை மற்றும் வை ராஜா வை என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். விஜயின் லியோ திரைப்படத்தில் கூட கௌதம் மேனனின் மனைவியாக இவர் நடித்திருந்தார்.
பிரசாந்த் ஹீரோவாக நடித்த அந்தகன் திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். சில ஹிந்தி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் முறை வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க