பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய கவினின் ‘ஸ்டார்’ படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் ‘டீ’ விளம்பர நடிகை.. யார் இந்த ப்ரீத்தி முகுந்தன்..?

By Begam on பிப்ரவரி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கவின். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மட்டுமின்றி தனது திறமையான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்பொழுது இவர் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் இலன் இயக்கத்தில்  ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

இத்திரைப்படத்தில் முதன்முதலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கமிட் ஆனதாகவும், ஆனால் அவர் விலகியதால் , பின்னர் கவின் தற்பொழுது ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்கிற இரண்டு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இப்படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

   

 

இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரிவீல் வீடியோ தான் தற்பொழுது ரிலீசாகி வருகிறது. அதன்படி கவினுக்கு ஜோடியாக ஜிமிக்கி என்கிற கதாபாத்திரத்தில், நடிகை அதிதி போகன்கார் நடிக்க உள்ளார். இவரைத்தொடர்ந்து மீரா மலர்க்கொடி என்ற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடிக்க உள்ளார். நடிகை ப்ரீத்தி முகுந்தன் பிரபல பரதநாட்டிய கலைஞராக வலம் வருபவர். இவர் மாடல் அழகியாகவும், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான இசை ஆல்பங்கள் ஆடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by KADHAI FILMS (@kadhai_films)

குறிப்பாக இவர் டிஜேயின் ‘முட்டு முட்டு’ என்ற பிரபல ஆல்பம் பாடலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் AVT கோல்ட் கப் விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இதோடு மட்டுமின்றி தற்பொழுது இவர் பான் இந்திய படமாக தயாராகி வரும் கண்ணப்பா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் ஆகியுள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் கவிஞனின் ஸ்டார் திரைப்படத்தில் மீரா மலர்கொடி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். தற்பொழுது இவரின் கேரக்டர் ரிவீல் வீடியோ தான் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…